Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

July 04, 2010

மாலை நேரம் மழை தூறும் காலம்

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் அமர்கிறேன்
நீயும் நானும்
ஒரு வரிசையில்
சிறு மேகம் போலே மிதக்கிறோம்
ஓடும் பேருந்தில்
உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே


ஒ ஹோ காதல் இங்கே பிறந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


மூவர் இருக்கையில் அமர்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
இருவர் இருக்கையில் அமர்கையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன(என்னை) இழந்தேன் என


ஒரு முறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

No comments:

Post a Comment