Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

February 19, 2014

எனக்குப் பிடித்த பாடல்

’எனக்குப் பிடித்த பாடல்’ 2003-இல் வெளிவந்த பாடல். இத்தனை ஆண்டுகளில் ஒருதடவை கூட அதனை நான் கேட்டது இல்லை. தற்ச்செயலாக ஐ-பெட்-இல் எனது தம்பி பதிவிறக்கம் செய்து இருந்தான். அதை கேட்டேன். வரிகளில் மெய் மறந்தேன். மிகவும் பிடித்த வரிகளை பெரிதுப்படுத்தி உள்ளேன். :)

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
திரைப்படம்: ஜுலி கணபதி
இசை: இளையராஜா
இயக்குனர்: பாலு மகேந்திரா.

No comments:

Post a Comment