December 21, 2015

குறுந்தொகை - காமம் காமம்

136. குறிஞ்சி - தலைவன் கூற்று

காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.
    -மிளைப்பெருங் கந்தனார்.

Translation 1
Love, love, they say. Love
is neither a demoness
nor a malady.

Neither does it grow on you
infinitesimally
nor does it cool off
with time.

No, the nature of love
is that of the elephant
that placidly chews on foliage
and yet, is driven into musth
when the time comes,
and lightning strikes

at the first sight
of her.
  - By Milai Perung-Kandhan

Translation 2 (by (AK Ramanujam)
Love is not a disease nor it is a feeling which will come and leave you after some time(effectively saying it is not a crush or infatuation). It is a feeling which is always hidden in you and get triggered suddenly. The trigger in case of love is when you see your lady love. All your hidden feeling takes complete control over you. This is is compared with madness(madam) of the elephant which is usually very calm creature. The madam is a very aggressive state similarly the poet is building an imagery that the madness of love is so aggressive(the love desire) that a person cannot take control over it. He doesn't know when it occurs and will never know when it is going to go away.

 
பொருள்: (கற்க நிற்க) 
     (பி-ம்.) 3. ‘தணித்தலும்’; 4. ‘றாள் பதம்’.
     (ப-ரை.) காமம் காமம் என்ப - காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; காமம் - அக்காமமானது, அணங்கும் - புதியதாகத் தோற்றும் வருத்தமும், பிணியும் அன்று - நோயும் அன்று; நுணங்கி - நுண்ணிதாகி, கடுத்தலும் - மிகுதலும், தணிதலும் - குறைதலும், இன்று - இலது; யானை---, குளகு மென்று ஆள் மதம் போல - தழை யுணவை மென்று தின்று அதனாற் கொண்ட மதத்தைப் போல, காணுநர் பெறின் - கண்டு மகிழ்வாரைப் பெற்றால், அது பாணியும் உடைத்து - அக்காமம் வெளிப்படும் செவ்வியையும் உடையது.

     (முடிபு) காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்று; கடுத்தலும் தணிதலும் இன்று; அது காணுநர்ப் பெறின் பாணியும் உடைத்து.

     (கருத்து) காமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.
     (வி-ரை.) தலைவன் ஒரு தலைவியைக் காமுற்றா னென்பதை யறிந்த பாங்கன், “பேரறிவுடைய நீ காம நோயை அடைதல் நன்றோ?” என்று இடித்துரைக்க, அவனை நோக்கித் தலைவன் கூறியது இது.

     என்ப - என்று உலகினர் கூறுவர். பொதுவாகச் சுட்டினும் பாங்கன் கூறியதையே தலைவன் கருதினான். அணங்கு - பிறரால் உண்டாகும் வருத்தம். பிணி - தன்பால் தோன்றும் நோய். கடுத்தல்: கடியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; (குறள். 706, பரிமேல்..)

     நுணங்கிக் கடுத்தலென்னும் தொடரை இரண்டு செயலாக்கி நுணங்குதலும், கடுத்தலுமென்று கொள்க. கடுத்தல் - வெம்மையாதல்; தணிதல்- தண்மையாதல் எனலும் பொருந்தும் (குறள். 1104.)

     அடங்கியிருந்த யானையின் மதம் தழையுணவை உண்ட காலத்தில் வெளிப்படுவதைப் போல, ஊழின் வலியால் காணற்குரியாரைக் காணப்பெறின் இயல்பாகவே உள்ளத்துள் அடங்கியிருந்த காமம் வெளிப்படுமென்று உவமையை விரித்துக் கொள்க. இங்ஙனம் கூறியதனால், “தெய்வத்தின் ஆணை வழியே யான் தலைவியைக் கண்டேன்; அவள் எனக்குரிய ளாதலின் அவளைக் கண்ட மாத்திரத்தே என்பால் இதுகாறும் தோற்றாமல் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் செவ்வியை உடையதாயிற்று. ஆதலின் யான் கொண்ட காமம் பிறரால் வந்த வருத்தமன்று; என்பால் புதிதாக வந்த நோயுமன்று” என்பதைத் தலைவன் விளக்கினான்.


பொருள் 2 (மூன்றில்)
    “காமங் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே”

என்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

அணங்கு என்றால் சோகம் என்று பொருள். என்னை மிகவும் பாதித்த குறுந்தொகை வரி ஒன்று உண்டு. “யார் அணங்குற்றனை கடலே” என்று கடலை நோக்கி கேட்பாள் தலைவி. இதற்கு என்ன பொருள்? யாருக்காக சோகப்பட்டாய் என்பது தானே அந்த வரிக்கான பொருள்? ஆனால் அணங்கு என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் உண்டு என்று பின்னர் அறிந்தேன். சன்னதம் கொண்டு ஆடுதல், பேய்ப்பிடித்து ஆடுதல். இப்பொழுது அந்த “யார் அணங்குற்றனை கடலே” வரியின் பொருள் என்ன? “யாருக்காக வெறிபிடித்து ஆடுகிறாய் கடலே? “ அல்லது “யார் காரணமாக வெறி பிடித்து ஆடுகிறாய் கடலே?”. கடலின் கொந்தளிப்பின் முன் நின்று நான் இந்த வரியை உச்சரித்திருக்கிறேன். இன்று இந்த வரியை கற்பனாவாத வரி என்று ஒரு விமர்சகன் நிராகரிக்கலாம். ஆனால் அந்த வரியுள் புதைந்திருக்கும் எழுச்சி உணரக்கூடிய ஒன்று.

காமம் என்பது அணங்கோ நோயோ அல்ல என்கிறார் மிளைப்பெருங்கந்தனார். இங்கு அணங்கு என்பதற்கு சோகம், துயரம் என்று பொருள் கொள்ளலாம். வெறி வந்தாடுதல் என்ற பொருள் கொண்டால் அந்த கணம் மட்டுமே தோன்றும் உணர்வெழுச்சி என்ற பொருளும் வருகிறது அல்லவா? சரி, துயரமோ, உணர்வெழுச்சியோ, நோயோ அல்ல காமம். பின் என்ன தான் அது? விளங்கங்களுக்குள் போவதற்கு முன்... இங்கு காமம் என்பதை உடல்சார்ந்த காமம் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் உளம் சார்ந்த காதலையும் குறிப்பதாக கொண்டால் பாடலின் வீர்யம் அதிகரிப்பதாகத் தோன்றுகிறது.

முதல் விளக்கத்தை பார்க்கலாம்.
   
    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
    கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
    குளகு மென்றாள் மதம் போலப்
    பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.
   
    - மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. அதிமதுர தழைகளை உண்ட யானையின் உணர்வெழுச்சி போன்றது அது. யானை ஒரு முறை மிக இனிப்பான அந்த தழைகளை உண்டதும் அது உணர்வெழுச்சு கொள்கிறது. அந்த உணர்வெழுச்சி எங்கே போகிறது? எங்கும் இல்லை. தணியாது குறையாது அதனுள் உறைகிறது அந்த உணர்வெழுச்சி. அதே தழைகளை மீண்டும் பார்த்த கணம் அது குடம் உடைந்து நீர் வெளியேறுவது போல வெளியேறுகிறது. அது போன்றது தான் காதலும் என்கிறார். காதல் ஒரு முறை வரும் உணர்வெழுச்சி அல்ல. காதல் கொண்டவரை காணும் போதெல்லாம் பொங்கும் உணர்வு. இதுவே முதல் விளக்கம்.
அடுத்த விளக்கம்,
   
    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
    முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
    மூதாதை வந்தாங்கு
    விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
   
    - மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு ஒரே சமயத்தில் உண்டு முடிக்காமல் அசை போட்டுக்கொண்டே இருக்குமே அது போல நினைக்க நினைக்க இன்பம் தருவது அது. இலை, புல் ஆகியவை ஜீரணிக்க மிகவும் கடினமான பொருட்கள். ஒவ்வொரு மிருகமும் இதை ஒவ்வொரு விதத்தில் எதிர்கொள்கிறது. ஆடு மாடு போன்ற கால்நடைகள் உண்ட இலைகளை மீண்டும் வாய்பகுதிக்கு கொண்டு வந்து அசை போடுகின்றன. வயதான பசுவின் ஜீரணசக்தி இன்னமும் மழுங்கியே இருக்கும். அசை போடுதலின் நீளம் அதிகமாகவே இருக்கும். அசை போடப் போட இலையிலிருந்து புதுப்புது சுவைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த இலைகளுடன் ஏன் காதலை ஒப்புமைப்படுத்த வேண்டும்? காதலும் அது நிகழும் பொழுது முழுதும் புரிவதில்லையா? அதை அசை போடப் போடத்தான் பிடிபடுகிறதா? காதல் என்ன என்பதும் ஒவ்வொரு முறை “அசை” போடும் போதும் புதிதாக உருவாகி வருகிறதா?
இன்னொன்றும் உள்ளது. இந்த இரண்டாம் விளக்கம் முதல் விளக்கத்தின் ஒரு வெற்றிடத்தை நிரப்புகிறது. முதல் விளக்கத்தில் காதல் காதலிப்பவரை காணும் தோறும் வரும் உணர்ச்சி என்கிறது. எனில் காணாத போது? காணாத போதும் அசை போடுதலை போன்று இன்பம் பயப்பது அது.

குறிப்பு : எனது பழைய கட்டுரை ஒன்றின் நீட்சி இது.(பொருள்: காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; அக் காமம் புதியதாகத் தோன்றும் வருத்தமும் அன்று; உடலில் தோன்றும் நோயும் அன்று. கடுத்தலும்(மிகுதலும்), தணிதலும் இன்று; யானை குளகு என்ற தழையுணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப் போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும் சிறப்பினை உடையது).

அடங்கியிருந்த யானையின் மதம் குளகு என்ற தழையுணவை உண்டதும் வெளிப்படுவதுபோல ஊழின் வலிமையல் காணற்குரியவரைக் காணப்பெறின்இயல்பாக உள்ளத்தில் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் என்று உவமையை விரித்தால் பொருள் புலப்படும்.

சிந்தாமணியிலும் நச்சர் உரையில் " குளகுபோல் மதத்தை விளைவிப்பவள் இவளும் ஆதலால் விடுத்தலரிதென்றான்"(சிந்தமணி உரை 750) என்று குளகு பற்றிக் குறித்துள்ளார்.

மேலும் மதம் கொண்ட யானையின் மத்தகம் வாழையின் குருத்தைத் தடவும்பொழுது மதம் அடங்கும்(வலிமை அழியும்) என்று ஒரு குறிப்பு வருகின்றது.

" சோலை வாழைச் சுரிநுகும் பினையஅணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்துமயங்கு துயருற்ற மையல் வேழம்"( குறுந்தொகை 308)

யானைக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி (அகம் 302-1-4),அகம் 8- 9-11) என்னும் சங்க நூல் வரிகளாலும் இதனை உறுதிசெய்துகொள்ளலாம்.

எனவே யானைக்குக் குளகு உண்டால் மதம் பிடிக்கும் என்றும் வாழை இலையின் குருத்து மதத்தை நீக்கும் என்று குறுந்தொகை வழியாக அறியமுடிகின்றது.

வாழையினால் யானையின் வலி கெடும் என்றது " யானைக்கு வாழைத்தண்டு,ஆளுக்குக் கீரைத்தண்டு" என்று சிற்றூரில வழங்கும் பழமொழியாலும் உணரலாம் என்று உ.வே.சா பழமொழியை எடுத்துக்காட்டுகின்றார்.

இது பற்றி பிரஞ்சு நாட்டுப் பேராசிரியர் செவியார் அவர்களிடம் உரையாடியபொழுது அவர் புதுமைச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.அவர் தொல்காப்பியம் சேனாவரையர் உரையை எழுத்தெண்ணிக் கற்றுப் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்தவர்.

சேனாவரையர் உரையில் இடம்பெறும் (தொல்.சொல். நூற்பா 37 உரை) "யானைநூல் வல்லானொருவன்" என்னும் தொடரை எடுத்துக்காட்டி யானை இலக்கணம் குறிப்பிடும் நூல் தமிழில் இருந்ததையும் "கஜ சாஸ்திரம்" என்னும் நூல் சரசுவதிமகால் நூலகத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டு யானை நூல் படித்தால் நான் தேடுவதற்கு விடை கிடைக்கலாம் என்று ஒரு குறிப்பை விளக்கினார்.


December 11, 2015

நின்னயே ரதி என்று

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாள்!
பல வருடங்களாக எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ஒன்று.

நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
I think you are the most beautiful women, Oh Lover (Kannammaa)!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)
I thought you as my friend and surrendered to you Oh Lover(Kannammaa)!

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
Gold might equal your skin! Nothing to equal you(or only your resemblance can equal you)!
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)
And then you are the young angel! Oh Lover(Kannammaa)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
The king is showering me with arrows... at that time
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)
Look at me! Reach out to me (to save me)! Oh Lover(Kannammaa)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
Everything is bliss now onwards when united with the God(Lover) is what it appears to me!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)
​Love! Love Everything here! Oh Lover (Kannammaa)!

December 07, 2015

தாமதம்

வாழ்வில் முடிவுகளை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கொடியது என்பதை முடிவு எடுத்தப்பின்பு அறிந்துக்கொள்கிறேன். சில சமயம் தாமதத்தின் தாக்கம் தற்செயலில் நம் ஆற்றாமையால் விளங்குகிறது. சில சமயம் முடிவின் முடிவு நல்லவையாக இருக்கும். ஆனால் முடிவிற்கு முன் நாம் தயங்கிய ஒவ்வொரு நாளும் நரகம். இரு விதத்திலும் தாமதம் கொடியதே. இரவு துயிலும் பொழுது உரக்கம் இல்லையென்றால், சிந்தனைகள் தற்செயலில் முழுமனதுடன் குவிக்க முடியவில்லையென்றால் அது துன்பத்திற்கு அறிகுறி. சில முடிவுகளுக்கு மிகபெரிய பரிசுகளை கொடுத்துள்ளேன்.