Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

December 11, 2015

நின்னயே ரதி என்று

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாள்!
பல வருடங்களாக எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ஒன்று.

நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
I think you are the most beautiful women, Oh Lover (Kannammaa)!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)
I thought you as my friend and surrendered to you Oh Lover(Kannammaa)!

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
Gold might equal your skin! Nothing to equal you(or only your resemblance can equal you)!
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)
And then you are the young angel! Oh Lover(Kannammaa)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
The king is showering me with arrows... at that time
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)
Look at me! Reach out to me (to save me)! Oh Lover(Kannammaa)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
Everything is bliss now onwards when united with the God(Lover) is what it appears to me!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)
​Love! Love Everything here! Oh Lover (Kannammaa)!

December 07, 2015

தாமதம்

வாழ்வில் முடிவுகளை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கொடியது என்பதை முடிவு எடுத்தப்பின்பு அறிந்துக்கொள்கிறேன். சில சமயம் தாமதத்தின் தாக்கம் தற்செயலில் நம் ஆற்றாமையால் விளங்குகிறது. சில சமயம் முடிவின் முடிவு நல்லவையாக இருக்கும். ஆனால் முடிவிற்கு முன் நாம் தயங்கிய ஒவ்வொரு நாளும் நரகம். இரு விதத்திலும் தாமதம் கொடியதே. இரவு துயிலும் பொழுது உரக்கம் இல்லையென்றால், சிந்தனைகள் தற்செயலில் முழுமனதுடன் குவிக்க முடியவில்லையென்றால் அது துன்பத்திற்கு அறிகுறி. சில முடிவுகளுக்கு மிகபெரிய பரிசுகளை கொடுத்துள்ளேன்.

July 30, 2015

உருவாய் அருவாய் | முருகர் பாடல்

சில வாரங்களாக முன்பு  முருகபெருமானுக்கு பாடும் இப்பாடலை பற்றி அறிந்தேன். தமிழ்ப்பாடல் ஆயினும் எனக்கு இதன் அக அர்த்தம் விளங்கவில்லை. சற்று நேரடியாக இல்லை. ஜெயமோகனின் வளையத்தில் தற்செயலாக படிக்க நேரிட்டது. எப்படிப்பட்ட வரிகள் இவை என்பதை நீங்களே படித்து தெரிந்துக்  கொள்ளுங்கள்!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வளையத்தில் இருந்து பொருள் இங்கே 

அதிலும் அருணகிரிநாதர் நுட்பமான சம்ஸ்கிருத தத்துவக் கலைச்சொற்களை தாராளமாகவே பெய்து தன் பாடல்களைப் பாடியிருக்கிறார். இருபெருமொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உடைய ஒருவரால் மட்டுமே அந்நூலின் அகம் காணமுடியும், அனுபூதியும் கனியுமென்றால். கந்தரனுபூதியும் அப்படிப்பட்ட நூலே.

நீங்கள் சொன்ன கவிதை இது. பெரும்பாலான சைவர்களுக்குத் தெரிந்த பாடல் இதுவாகவே இருக்கும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


மிக எளிமையாக ‘முருகனே நீ வந்து எனக்கு அருள்வாய்’ என்று கூவும் வரிகள் இவை என நம்மில் பலர் சொல்லலாம். ஆனால் இவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒரு கூர்ந்த மனம் அடையும் பொருள்நிலைகள் முடிவிலாதவை.

முருகனை பரம்பொருளாகக் கண்டுவணங்குகிறது இக்கவிதை. பொதுவாக நம் மரபில் உருவம் கொண்ட எந்த ஒரு தெய்வத்தையும் தோத்திரங்களில் உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பிரம்ம வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உருவகித்துப் பாடுவதே வழக்கம்.

அந்தப் பரம்பொருளின் சித்திரத்தை இக்கவிதை அளிக்கும் விதமே கூர்ந்து கவனிக்கவேண்டியது. ‘உருவமாகவும் அருவமாகவும், மொட்டாகவும் மலராகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அதன் உயிராகவும், செயலாகவும் அதன் விதியாகவும் இருப்பவனே நீ குருவாக வந்து அருள்வாய்’ என்று இறைஞ்சுகிறது.

இந்தவரிகளில் அருவமான பரம்பொருள் உருவவடிவம் கொண்டு வருவதன் ஒரு நுண் சித்திரத்தை அருணகிரிநாதர் அளிக்கிறார். இப்பிரபஞ்சவெளியின் சாரமாக உள்ள அலகிலா ஆற்றல், அல்லது இப்பிரபஞ்சத்தின் அடிப்படையாக உள்ள பெருங்கருத்து, அல்லது இப்பிரபஞ்சமேயாக மாறித்தெரியும் அது எவ்வாறு நாமறியும் நூறாயிரம் பொருட்களாக, அவற்றில் நாம் கண்டு வணங்கும் தெய்வங்களாக, உருமாற்றம் கொண்டது? இன்றைய இயற்பியலாளனின் பெருவினாவும் அதுவே என நாம் அறிவோம்.

‘உருவாய் அருவாய்’ என்ற எதிரீடு முதலில் முன்வைக்கப்படுகிறது. நாம் காணும் அனைத்துமே உருவமாக உள்ளன. அவ்வுருவங்கள் அனைத்துமாக தன் இறைவனை உருவகிக்கும் இக்கவிதை பொருள்வயப்பிரபஞ்சமாகவே அவனை முன்னிறுத்துகிறது. அந்தப்பொருள்வயப்பிரபஞ்சம் அல்லாத அருவமான வெளியாகவும் அவனை உருவகிக்கிறது.

உருவம் கொண்ட இறைவடிவமாகவும் உருவமில்லாத இறைவடிவமாகவும் இருப்பவன் எனச் சொல்லிவிட்டு அதன்பின் அதற்கு இணையாக பிற எதிரீடுகளை வைத்துச் செல்கிறது கவிதை. ‘உள்ளதாகவும் இல்லாததாகவும்’ என்பது அடுத்த எதிரீடு. உள்ளது உருவம். இல்லாதது அருவம். உள்ளவை எல்லாம் அவனே. இல்லை என்ற நிலையிலும் அவனே இருக்கிறான். பெருவெளியில் இன்மையும் கூட  ஓர் ஆற்றலாக, பரம்பொருளின் இருப்பாக ஆகலாம். அது இல்லாமல் இருக்கும்நிலைகூட அதுவே!

அடுத்த எதிரீடு எளிய உவமை. ‘மொட்டாகவும் மலராகவும்’ என்ற வரி இந்திய வேதாந்த மரபை உணர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளிக்கும். ‘பரம்பொருள் அருவ நிலையில் இருந்து உருவமாகி வருகிறது’ என்பதே வேதாந்த தரிசனம். அருவநிலையே உண்மையானது, உருவநிலை அந்த அருவநிலை உருவாக்கும் ஒரு மாயத்தோற்றமே என அத்வைதம் வாதிடும்.

ஆனால் இந்த வரி உருவப்பிரபஞ்சத்தை முதல்நிலை உண்மையாக முன்வைத்து அதன் நுண்வடிவமாக அருவநிலையை உருவகித்துக்காட்டுகிறது.  உருவத்துக்கு மொட்டும் அருவத்துக்கு மலரும் உவமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. உருவம் கொண்டு நம் முன் நிற்கும் இந்த பெருவெளி என்ற மொட்டு மலர்ந்த நிலையே உருவமிலா பரம்பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!

அடுத்த எதிரீடு இன்னொரு உவமைமூலம் அதையே மேலும் வலியுறுத்துகிறது. ‘மணியாகவும்  ஒளியாகவும்’. இந்த பருப்பிரபஞ்சம் மாணிக்கம் என்றால் அதன் ஒளிதான் அலகிலாத ஆற்றலாக விரிந்த பரவெளி. அருவம் என்பது உருவமாகி நிற்பவற்றின் சாரமாக உறையும் ஒளியே என்கிறது இந்த உவமை!

மேலும் வலியுறுத்துகிறது அடுத்த எதிரீடு. ‘கருவாகவும் உயிராகவும்’ கரு என்று இந்த பொருள்வயப்பிரபஞ்சமே சொல்லப்படுகிறது. அந்தக் கருவுக்குள் உள்ள உயிரே ஆற்றல்பிரபஞ்சம் அல்லது அருவ வெளி!

கடைசி எதிரீடு பௌத்த தரிசனத்துடன் தொடர்புடையது. பௌத்தம் இப் பொருள்வயப்பிரபஞ்சம் என்பது ஒரு முடிவிலா நிகழ்வே என்று வகுக்கிறது. இந்நிகழ்வின் இயங்குவிதியாக உள்ளதே பேரறம் அல்லது மகாதர்மம்.  ‘கதியாகவும் விதியாகவும்’ என்ற வரி அதையே சுட்டுகிறது. கதி என்றால் நிகழ்வு. அந்நிகழ்வாகவும் அதன் விதியாகவும் முருகனை உருவகிக்கிறது இவ்வரி.

எதிரீடுகளின் வரிசையை வைத்துப் பார்த்தால் உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட பொருள்பிரபஞ்சத்தையே கதி என்று சொல்கிறார் அருணகிரிநாதர். இப்பருப்பிரபஞ்சம் ஒரு கதி [இயக்கமுறை] மட்டுமென்றால் அதன் சாரம் அதன் விதி. அந்த விதியே அருவம், இன்மைநிலை, மலர் , ஒளி, உயிர்… இரண்டும் அவனே என்று சொல்கிறது.

கடைசி வரி மிக இனிய ஒரு முடிச்சுடன் முடிகிறது. ‘குருவாய் வருக’ என்று முருகனை அழைக்கிறது அது. குரு என்பது இங்கே உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட முதல்நிலையின் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அருவம், இன்மை, மலர் , ஒளி, உயிர் எனச் சொல்லப்பட்ட இரண்டம்நிலையில் இருப்பது எது?

மொட்டு மலராவதுபோல, மணியில் ஒளி பிறப்பதுபோல, கருவில் உயிர் நிகழ்வது போல குருவின் விளைவாக உள்ளது ஞானமே. அனுபூதியே உயர் ஞானம். குருவாக முருகன் வந்தால் ஞானமுமாக அவனே நிற்பான் என உரைக்கிறது பாடல். குருவாய் வருக என்ற அழைப்பு அவ்வகையில் மேலும் முன்னகர்ந்து ஞானமுமாக வருக என முடிகிறது.

இவ்வரிகள் கந்தரனுபூதியின் கடைசிப் பாடல். இவ்வரிகளில் இருந்து பின்னால்நகர்ந்து முன்னாலுள்ள வரிகளை எட்டினால் பல வரிகளின் ஆழமும் தீவிரமும் நம்மை திகைக்கச் செய்யும்.

‘தன்னந் தனி நிற்பது தானறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ’

என்ற வரி ஓர் உதாரணம். வேதங்கள் முடிவிலா பரவெளியின் ஈடிணையற்ற தனிமையை பாடுகின்றன. அது அல்லாமல் வேறொன்றுமில்லை என்ற நிலையின் தனிமை. பரம்பொருளின் தனிமை. அந்த எல்லையற்ற தன்னந்தனிப்பொருள் தன்னை இன்னொருவருக்கு எப்படி அறிவுறுத்த இயலும்?

அவ்வினாவுக்கு விடையாகவே குருவாக வருக என்ற அழைப்பு. குருவாகி அது வருகையில் ஞானத்தின் அனுபூதி அதன் விளைவாக நிகழ்ந்தாகவேண்டும் அல்லவா?

கந்தரனுபூதி சைவசித்தாந்தத்தில் கிளைத்த நூல். ஆகவேதான் அது வேதாந்த மரபைப்போல உருவத்தை நிராகரிக்கவில்லை. பருப்பிரபஞ்சமும் அதற்கு ஓர் உண்மையே. அது மாயத்தோற்றம் அல்ல. மாயை என்பது அதை முழுதுணராது மயங்கும் நமது குறைநிலையே. பருப்பிரபஞ்சத்தை அல்லது உருவத்தை முதல் நிலையாக்கி அதில் இருந்து அதன் நுண்நிலையாக பரவெளியை அல்லது அருவத்தைக் கண்டு முன்வைக்கிறது இப்பாடல்.

ஆனால் இந்தியமெய்ஞான மரபுகள் அனைத்துமே உச்சநிலையில் ‘ஆற்றல் X ஜடம்’ அல்லது ‘உருவம் X அருவம்’ என்னும் எதிரீடுகளை தாண்டிய ஒருமையையே முன்னைக்கின்றன. அதையே பாம்பொருள்த்தன்மையாக காட்டுகின்றன. மேலும் பின்னால் சென்றால் இன்னொரு வரியில் அதைக் காணலாம்

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அற நின்ற பிரான் அல்லையோ?

‘அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில் நின்று அறிபவர்களின் அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக நின்ற பிரான் அல்லவா நீ?’ அறிவின் உச்சம் என்பது அறிகிறேன் என்னும் நிலை இல்லாமலாதல். அறிவுடன் அறிபவனும் ஒன்றாதல். அந்நிலையில் நின்று அறிபவர் நெஞ்சில் அவர்களில் இருந்து பிறிதாக அல்லாமல் நிற்கும் அதுவே அவன் என்கிறார் அருணகிரிநாதர். அனுபூதி என்பது அந்நிலையே.

July 25, 2015

சின்சின்னாடி | Cincinnati

நேற்று 24-ஜூலை 2015 அன்று எனக்கு பிடித்த பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் கச்சேரியினை காணச்சென்றேன். அது மட்டும் இன்றி நண்பன் ஜூட் சத்யனும் வந்தான். நான் ஃபஸ்புகில் ஒருவரிடம் டிக்கேட்டை வாங்கினேன்.  நாங்கள் சரியாக ஒரு வருடம் பின்பு பார்த்துக்கொண்டோம்.  

ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் அவ்வளவு இனிமை. அவர்களின் குரலும் தேன் சொட்டும் மதுரம். ஒலி பொறியாளர் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை குறைத்துவிட்டார். நல்லாதாய் போயிற்று. ஆனால் ஷ்ரேயா கோஷலின் குரல் அவ்வரங்கத்தையே நிறைத்தது. சிலசமயம் இசை இல்லாமல் பாடல் மட்டும் பாடினார்கள். அவை அனைத்தும் அப்படி ஒரு மதுரம். அவர்களின் குரலில் லயித்து போனேன்.  அவர்கள் குரல் இந்நூற்றாண்டு முழுதும் ஒலிக்கட்டும். அதற்கான அனைத்து ஆரோக்கியத்தையும் இறைவன் அவர்களுக்கு அருள் வேண்டும். 

  

ஷ்ரேயா கோஷல் அவர்கள் பாடிய பாடல்கள் இதோ

1) Bahara - I hate luv story
2) Agar Tum Mil Jao - Zeher
3) Oh Saathi Re - Omkara
4) Saans - Jab Tak Hai Jaan
5) Manwa Laage  - Happy New Year
6) Samjhawan - Humpty Sharma ki Dulhania
7) Journey - Piku
8) Piya O Re Piya - Tere Naal Love Ho Gaya
9) Dheere Dheere (Saibo) - Shor in the City
10) Munbe Vaa - Silunnu Oru Kaadhal
11) Aashiyan - Barfi
12) Barso re - Guru
13) Yeh Ishq Hai - Jab we met
14) Zoobi Doobi - 3 Idiots
15) Ooh La La - Dirty Picture
16) Radha - Student of the year
17) Chinki Chameli - Agneepath
18) Teri Meri - Bodyguard
19) Tujh Mein Rab - Rab Ne Bana Di Jodi
20) Teri Ore - Singh is King
21) Vintunnaavvaa - Ye Maaya Chesaave [Mannippaaya - Vinnaithaadi varuvaayaa]
22) Lag Ja Gale
23) Jaadu Hai Nasha Hai - Jism
24) Raabta - Agent Vinod
25) Bairi Piya - Dev Das
26) Mere Dholna - Bhool Bhulaiyaa
27) Nagada Sang Dhol - Ram Leela
28) Sun Raha - Aashiqui 2





 (Shreya Ghoshal on the stage)

Jude (Right) and I (Left)

ஹம்சாவிற்கு பிடித்த ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் இதோ
1) Bahara - I hate love stories
2) Sathiya Sathiya - Singam
3) Samjhawan - Humpty Sharma Ki Dulhaniya
4) Tujh me rab dikta hai - Rab ne bana di jodi
5) Jhalla Wallah - Ishqzade
6) Mein Agar Kahoon - Om Shanthi Om
7) Piyu Bole - Parineeta
8) Khabar Nahi - Dostana

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவர்கள் பாடிய 30 பாடல்களில் (28 ஹிந்தி) 18 பாடல்கள் குறைந்த பட்ச பரிட்சயம் உண்டு எனக்கு. மனதுக்கு நிறைவான நாளாக அமைந்தது. கச்சேரி முடிந்த உடன் ஸ்டேஜ் டோர்க்கு சென்று ஷ்ரேயா கோஷலுடன் ஒரு புகைப்படம் எடுக்க 45 நிமிடம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் எப்போழுதோ கச்சேரி முடிந்த உடன் அவழியாக கிளம்பிவிட்டார்கள் என்று தாமதமாகவே தெரிந்தது. சற்று வருத்தமே. பின்பு மோட்டலுக்கு வந்து உறங்கினோம். 






சனிக்கிழமை காலை எழுந்து சிறிது நேரம் தோழி ப்ரசன்ன தேவியுடன் கூகுல் ஹங்கொட்-இல் ஜூடும் நானும் உரையாடிக்கொண்டு இருந்தோம். பி.டி வேறு ராஜேஷ் நீ ரொம்ப அழகா தெரியர. இந்த மாதிரிலான் நான் உன்கிட்ட சொன்னதே கிடையாது தோன்னதும் கிடையாது. உன்கிட்ட ஒரு பெரிய மாற்றம் இருக்குனு. பிறகு என்னை பற்றியும் ஜூடை பற்றியும் எங்களது வாழ்வில் நடக்க இருக்க போகும் மாற்றங்களை பற்றியும் நகைத்து உரக்க வெடித்து சிரித்து உரையாடிக்கொண்டு இருந்தோம். ஒரு 30 நிமிடம் மிக நன்றாய் சென்று கொண்டு இருந்தது பேச்சு. குறைந்தது இன்னும் ஒரு 30 நிமிடம் சென்று இருக்க கூடியது. ஆனால்  நாங்கள் மோட்டலை 11 மணிக்கு காலி செய்ய வேண்டிய கட்டாயம்.  பின்பு ஒரு இடத்தில் மதிய உணவு உண்டோம். அதன் பின் ஒரு ஹிந்து கோயிலுக்கு சென்றோம். கோயில் உள்ளே மிக அழகாய் இருந்தது. நிறைவாகவும் இருந்தது. பின்பும் நானும் ஜூட்டும் எனக்கு வேண்டியவரிடம் பேசிக்கொண்டு இருந்தோம். துவக்கத்திலையே அனிமேஷன் அக்‌ஷன் (x-men, wolverine, superman, batman) அது இதுனு பேசி பனியை உடைத்து(ice break) நன்கு பேசினோம்.  சுமார் 90 நிமிடம் பேசினோம். அவர்கள் இருவருமே மிக நன்றாய் பேசினார்கள். புதியவர்கள் பேசிக்கொள்ளுவது போல இல்லை. 

அதன் பின்பு Ant Man(எறும்பு மனிதன்) திரைப்படம் பார்த்தோம் நானும் ஜூடும். வழக்கமான உலகத்தை காப்பாற்றும் ஒரு கதைக்களம். நல்ல படம்.  ஓ ஓ என்று எல்லாம் சொல்லக்கூடாது. ஆனால் Evangeline Lilly சூப்பரோ சூப்பர். அதுவும் அவளின் சிகை அலங்காரம் அவ்வளவு நேர்த்தி!

ஆக இன்று (24,25 July 2015) மிக நன்றாய் சென்றது!! 

 

 Evangeline Lilly

 

June 21, 2015

நினைப்பதெல்லாம் . . .

உளமார எழுத வேண்டிய தருணம் இது.

2013 எனது எம்.பி.ஏ கனவுகளில் ஆயுத்தமாகி எனது மனதை முழுமையாக அதற்கு ஒப்படைத்தேன். அதன் விளைவாக எம்.பி.ஏ-வுக்கு நுழைவுக்கிடைத்தது.  அப்போழுது 2014 ஏப்ரல்-ஜூலை ஒய்வு விடுப்பு நேரத்தில் கல்யாணம் பேச்சும் எண்ணமும் ஒலித்தது வீட்டிலும் மனதிலும். எனக்கு அவளின் முகமும் ஞாபகத்திற்கு வந்தது. அவளை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவளுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. அப்படி இருவருக்கும் ரசனை, குறிக்கோள்கள் (சொல்ல போனால் அவளிடம் நான் நன்றாக பேசிய பொழுது அவளின் லட்சியங்களை கேட்டே அவள் மீது மதிப்புக் கொண்டு அவளின் நட்பு பாராட்ட விரும்பினேன்) உயர்வாக இருப்பதனால் இருவரும் வாழ நன்றாகவும் ஆனந்தமாகவும் இருக்குமே என்று நினைத்தேன்.

நினைவுகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் வேவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள். எனது தங்கையின் கல்யானத்தால் ஆன குழப்பமே அதிகம். நான் வேறா ? தம்பியின் கல்யாணமும் சிக்கல்களுக்கு உள்ளாகும். எல்லோரும் முழு நிறைவு என்பது சற்று குறைவாக இருக்க சாத்தியம் அதிகம். முக்கியமாக நான் எம்.பி.ஏ படிக்க போனால் கல்யாணம் நடத்த தாமதம் ஆகும். அவளுடைய வீட்டில் எப்படி சொல்லி கல்யாணத்தை தாமத படுத்தவும் முடியாது. அதுவும் மூன்று நான்கு ஆண்டுகளாக பெண்ணுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களிடம். ஆதலால் என் எண்ணத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஆனால் அவ்வெண்ணம் விளைந்தது. என்னை விட்டு நீங்கா வண்ணம் இருந்தது. இப்படி போய் கொண்டு இருக்கையில் எங்கள் வீட்டிலும் பெண் பார்க்கும் படலம் தீவிரமாய் சென்று கொண்டு இருந்தது. அந்த சுழற்சியிலும் என்னை வேறு வழியின்றி ஆட்படுத்திக்கொண்டேன்.  ஒன்றும் அமையவில்லை.  இப்படி சென்றுக்கொண்டு இருக்கையில் எனது கல்லூரியில் ஒரு பெண் மீஷாவிடம் பல நாள் நடந்த பேச்சுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் - நீ எடுக்கும் முடிவை நீ வாழ்நாள் முழுவதும் சுமப்பாய். இதில் உன் குடும்பத்திற்கு என்று பார்த்தால் உன் மகிழ்ச்சி கேள்விக்குள்ளாகும். ஒருவேளை வீட்டில் பார்க்கும் பெண் சரியில்லை என்றால் என்ன செய்வாய் ? உனக்கு பிடித்ததை செய். வீட்டில் உள்ளவர்கள் உன் வாழ்க்கையில் இருக்கும் நேரம் குறைவு.

அதன் பின் நான் என்னை பற்றி அதிகம் யோசிக்க துவங்கினேன். நான் எனது வாழ்விற்கு என் நலனிற்கு என் அமைதியிற்கு என் மகிழ்ச்சியிற்கு வாழவேண்டிய நேரம் வந்து ஆயிற்று. கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம் என்னும் வண்டி தனை ஓட்டி ஆயிற்று. போதும். ஆதலால் என் மனதில் உள்ள நியாயமான எண்ணதிற்கு தர வேண்டிய இடத்தை தர நினைத்தேன்.  முதலில் தம்பியிடம் கூறினேன். அவன் சற்று குழப்பினான். இருப்பினும் என் முடிவு சரி என்றே எனக்கு பட்டது. ஊரில் இருந்து கிளம்பும் முன் அம்மாவிடம் மணக்குள விநாயகர் கோவிலில் வைத்து சொன்னேன். அம்மாவிடம் எதிர்ப்பு எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. அதேப் போல் அம்மா எதிர்க்கவில்லை. நீ ஒரு முடிவு எடுத்தால் நீ யோசித்து எடுப்பாய். ஆதலால் நான் சம்மதிக்கிறேன் என்று கூறினார்கள். பாட்டியிடம் கூறினேன். நீயுமா ? என்றாள். ஆம் பாட்டி. இவளை எனக்கு பிடித்து இருக்கிறது. நல்ல பெண் குணம் ரசனை என்றேன். பாட்டி முழு சரியும் சொல்லவில்லை முழு மறுப்பும் சொல்லவில்லை. சமூக சூழலில் பழைமைவாதியின் பின்புலத்தில் வாழ்க்கையில் அவள் பட்ட பாடத்தின் பின்னனியில் வைத்து பார்க்கையில் அதை தான் அவளிடம் எதிர்ப்பார்க்க முடியும். ஆனால் அவள் ஆசி எனக்கு இருநூறு சதவிகிதம் உண்டு என்று எனக்கு தெரியும்.  ஆதலால் துணிந்தேன்.

இருப்பினும் இப்பொழுது தான் மிகவும் கடினமான கட்டதிற்கு வந்தேன். அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்க போராட்டம். துன்னுள் விழைந்து மோதினேன். நண்பர்களை நாடினேன். அனைவரும் என்னை ஆதரித்தார்கள். கொலம்பஸ், இண்டியானவில் என் தூக்கங்கள் தொலைந்தது. எண்ணங்கள் அலைந்தது. கொலம்பஸில் வந்த முதல் வாரமே சொல்ல முற்பட்டேன். சொல்லக்கூடிய உன்னதமான தருணம் அல்ல. ஆதலால் பயணத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் அது எத்தனை உரக்கங்களை தள்ளிப்போட்டது தெரியுமா ? அதற்கு அடுத்த வாரம் சொல்ல முற்பட்டேன் . அதுவும் வேலைக்கு ஆகவில்லை. சரி இந்த வாரம் செல்லலாம் என இருந்தேன். செல்ல முடியாத சூழலில் அவள். வேறு வழியில்லை அலைப்பேசியில் சொல்வது தான் இப்போதைய வழி என்று முடிவு எடுத்தேன்.

இதற்கு ஆயுத்தம் என்பது அப்படி ஒரு முதன்மையான் செயல். ஆதலால் என் மனதில் உள்ளதை மிக தெளிவாக சொல்ல வேண்டும். ரத்தினச்சுருக்கமாக சொல்ல வேண்டும். ஆழமாக சொல்ல வேண்டும். அழகின்மையோடு சொல்லவேண்டும். ஆனால் நெஞ்சை பிராண்டும் அளவிற்கு மானே தேனே என்று எல்லாம் சொல்லக்கூடாது. பொதுவாக நான் எனது எம்.பி.ஏ வியூகங்களை வெளியே பேசுவதில்லை. ஆனால் நான் மார்கேட்டிங் ஃபில்ட் ஸ்டடியில் கற்றுக்கொண்டது என்னவென்றால் நீ சொல்வது மிக முக்கியம். அதுவே அடுத்தவர்களுக்கு போய் சேரும். உன் மனதில் என்ன நினைக்கிறாய் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் ஆதலால் சொல்வதை நன்றாய் ஆராய்ந்து ஆழமாக தெளிவாக அழகாக சுருக்கமாக சொல்.  ஆதலால் நான் சொல்ல வேண்டியதை தற்காலிக மின் மடலில் கொட்டினேன். சரி செய்தேன். கூட்டினேன். முறைப்படுத்தினேன். வார்த்தைகளை மாற்றினேன். இரண்டு நாட்களாக.  பாரதி சொன்ன மதி தனில் மிக தெளிவு வேண்டியதை பெற்றேன். 

இவ்வளவு ஆயுத்தமாகியும் அவளிடம் சொல்ல நேரம் நெருங்கும் பொழுது அப்படி ஒரு பட படப்பு. ஆனால் ஆயுத்தமாவது எவ்வளவு நன்மை பயவிக்கும் என்பதை அப்பொழுது உணர்ந்தேன். நான் பேச நினைத்தது தெளிவாக இருந்தது. பேசக்கூடாததும் தெளிவாக இருந்தது. முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதி வைத்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் சொல்வது ஈசியாக இருக்கும் ஏனென்றால் நம்ம ஓர் அளவு மனப்பாடம் செய்தே பழகிய மொழி. ஆனால் தமிழில் தான் சொல்லுவேன் என்று மனசங்கல்ப்பம் செய்து கொண்டேன். தமிழிலும் ஆயுத்தமானேன். ஏன் என்றால் அது தான் உள்ளார்ந்து வரும் (internalize என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்)

இன்று ஜுன் 19 2015 வெள்ளி அன்று மாலை 7 மணி. அவளிடம் பேசுவது முன்பு கை பட பட வென்று இருக்கிறது. கால்களோ உட்காரவில்லை. முகத்தை அலம்பினேன். தலைவாரினேன். என்னை பார்த்து கண்ணாடியில் சிரித்துக்கொண்டேன். இது நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனால் இனம்புரியாத ஒரு நடுக்கும் இருந்துக்கொண்டே தான் இருந்தது. குளிர்சாதன அரையில் திடீர் என்று ஐந்து-ஆறு டிகிரி குறைந்தால் ஏற்படும் நடுக்கம் போல. மாலை7:35க்கு அவளுக்கு போன் செய்தேன். போனை எடுத்துப் பேசினாள். எடுத்த உடனே சொல்லாதே. அவள் கேட்கும் மனநிலையில் இருக்கிறாளா அல்லது வேறு வேலையா இருக்கிறாளா என்பதை தெரிந்துக்கொள். ஒரு 5-10 நிமிடம் மொக்கையை போட்டேன். பின்பு அவளிடம் சொன்னேன். உங்கிட்ட ரொம்ப நாளா ஒன்னும் சொல்லனும் சொல்லனும்’னு நினைக்கிறேன். இம்பார்டண்ட் மேட்டர். சொல்லலாமா. இப்ப பேச முடியுமா என்று கேட்டேன். என்ன விஷயம் சொல்லு என்றாள். "நான் எம்.பி.ஏ காலேஜுக்க்கு வருவதற்கு முன்பு எனக்கு இவ்வெண்ணம் தோன்றியது. அப்போழுது இரண்டு வருடம் காத்திருக்க சொல்ல என்னால் முடியவில்லை. பெண் வீட்டிலும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எங்க வீட்டிலும் பார்க்க துவங்கவில்லை. சரி மேலே படிப்போம். இந்த எண்ணம் வளருதா பார்ப்போம் என்று இருந்தேன். சரி கேட்கலாம்னு தான் நெனச்சு இந்த முடிவுக்கு வந்தேன். (உம்ம்ம் என்றால். அவள் முகத்தில் ஒரு புன்னகையை கண்டேன். நீயா ராஜேஷ்  என்று அவளுக்கு ஒரு எண்ணம் போல) நம்ம இரண்டு பேருக்கும் பல விஷயம் ஒத்துப்போது. we have many things in common. நம்ம இரண்டு பேரும் கல்யாண வாழ்க்கைல சந்தோஷமா இருக்க முடியும்’னு நினைக்குறேன். நீயும் அப்படி நெனச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம். யோசிச்சு சொல்லு. ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா சொல்லு. எனக்கு புரியுது உனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்துச்சு. ரொம்ப நாள் யோசிச்சு தான் நான் கேக்குறேன்".  (பி.கு இதுவரை சொன்னவற்றில் ஒரு 90 சதவிகிதம் சொன்னேன். சில விஷயங்கள் பின்பு தொடர்ந்து பேசும் பொழுது சொல்லி இருப்பேன்) அப்பாடா என்று மூச்சு விட்டேன். 

ஆனால் அவளோ. நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்றாள். மறுபடியும் (பொதுவாக மிக அதிக படியாக பெண்கள் சொல்லும்)அதே வார்த்தைகளா என்று என் மனம் கன கனத்தது.  (இல்ல நீ இப்ப எதுவும் சொல்லாதே. யோசிச்சு சொல்லு என்று மனதில் நினைத்தேன். வாயும் வந்தது). ஆனால் உடனே சொல்லிவிட்டாள். நீ சொல்லுவது சரி. ஆனால்  எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. உண்மையை சொல்லி விடுகிறேன் என் வீட்டில் ஒரு விஷயம்(கல்யானம்) முடிவு அடையும் நிலையில் உள்ளது. நான் அந்த பையனிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாள். அப்படியா. ரொம்ப சந்தோஷம். Happy for you. Wish you good luck என்றேன். எப்ப கல்யாணம் என்று கேட்டேன். அது போய் கொண்டு இருக்கு. கொஞ்சம் இழுவையாதான் இருக்கு. அடுத்த மாசம் ஆகும் என்றாள். என்ன மன்னிச்சுரு. நான் உன்ன ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். இப்ப என்ன நிலைமைல கல்யாண தேடல் போய்னு இருக்குனு கேட்டு இருக்கலாம். இல்ல ராஜேஷ், நீ கேட்டு இருந்தாலும் சொல்லி இருக்க மாட்டேன் என்றாள். முடியும் வரை சொல்ல வேண்டாம் என்றே சித்தம் (பாடங்கள்) .  உனக்கு தோனிச்சானா எனக்கு தெரியாது. எனக்கு தோனிச்சு கேட்டேன். சாரி என்றேன். பரவா இல்லை ராஜேஷ். அது மிக இயற்கையான ஒரு எண்ணம் ஒரு தவறும் இல்லை. நீ இருக்கும் சந்தர்பத்தில் நானும் இதை தான் செய்வேன். தவறு இல்லை. நீ தவறாகவும் கேட்கவில்லை. நீ நேராக என்னிடம் கேட்டதே நல்ல விஷயம் தான்.  ஒன்னும் தப்பு இல்லை என்றாள். நம்ம நல்ல நண்பர்களா இருப்போம் என்று சொன்னாள். (ஆமா முஸ்தபா முஸ்தபா-வே தான்) கேட்க நல்ல தான் இருந்துச்சு. ஆனா என் மனதிற்கு அது அதிர்ச்சியே (ஆதாவது அவளுக்கு முடியும் தருவாயில் இருந்தது. ஏனெனில் சென்ற மாதம் தான் அவளின் கல்யானத்தேடல் சொதப்பி கொண்டு இருப்பதாக சொன்னாள்). பின்பு அவளின் கதையை கேட்டு கொண்டு இருந்தேன்.   பிறகு ஒரு 15-20 நிமிடத்திற்கு இடையில் ஒரு 5 நிமிடம் ஒன்றுமே நிகழாததுப் போலவே இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அவளிடம் பேசிய பின்பு வாய்விட்டு சிரித்தேன். சிரித்தேன். சிரித்தேன். ஆனா ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவளுக்கு விரைவாக நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணினேன்.

ஆயிரம் இருந்தாலும் அந்த அளவுக்கு ஒரு பக்குவத்தோட அவ எடுத்துக்குட்டதும் அதுக்கு அப்புறம் அவ பேசினதும் ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. ஏனா பல பேரு ஏதோ தலைக்கு வந்த தலை வலி தீடீர் என்று இடம் பெயர்ந்து நெஞ்சு வலி வந்தத்து போன்று அவள் பேசுவில்லை. அதுவும் அது இயற்கை என்று சொல்லுவதற்கு வாழ்வின் ஒரு புரிதல் வேண்டும் அல்லவா. ஒரு விதத்துல எனக்கு வருத்தம் (அதன் பின்பு நான் எவ்வளவு தான் நிகழ்ந்ததை நினைத்து வாய்விட்டு சிரித்தாலும் சில உண்மைகள் சிரிது நேரத்திற்கு கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்) இருப்பினும் பெரிய வருத்தம் இல்லாததிற்கு அவள் அதை எடுத்துக்கொண்டு என்னிடம் பேசிய விதமே காரணம்.  என் எம்.பி.ஏ கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் வகுப்பில் சொல்லி தந்தது தான் ஞாபகத்துக்கு வருது. எந்த ஒரு தருணத்திலும் நாம் சந்தர்ப்பத்திலும் (situation) சூழலிலும் தான் கவனம் செல்லுத்த வேண்டும். தனி நபர்(people) மீது கவனம் செலுத்தக்கூடாது என்று சொல்லி கொடுத்து உள்ளார்கள். (In difficult situations focus on situation not on people). அதை தானே அவள் அவ்வளவு அழகாக செய்தாள்.

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!!  
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

அதனால் தான் நினைப்பதெல்லாம் என்று இப்பதிவின் தலைப்பாக வைத்தேன். சொன்னவை யாவுமே நான் இப்பொழுது நினைப்பது. 

இப்பொழுது . . .
என் நெஞ்சுக்குள் முடிந்துவிட்டு
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

May 29, 2015

காளி காதல் - பாரதியார்

சில பாடல்கள் நெஞ்சினைத் தாண்டி நேரடியாக வேறெங்கோ உள்ளேச் செல்லும். அப்படி ஒரு பாரதி பாடல் இது - காளி காதல்

காளி காதல்
பின்னொர் இராவினிலே -- கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே -- களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்,
அன்னை வடிவமடா! -- இவள்
ஆதி பராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! -- பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8

செல்வங்கள் பொங்கிவரும்; -- நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே -- இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை -- இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை -- நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! 9
       - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

[பாமாலை : பக்தி பாடல்கள் >> தோத்திரப் பாடல்கள் >> மூன்று காதல்]


 

 

March 30, 2014

அறம் - பெட்ரோல் வங்கி

இன்று ஞாயிறுக்கிழமை 30-3-2013 மாலை 7 மணியளவில். பெட்ரோல் நிரப்ப புதுவையில் உள்ள அட்லேயர் பெட்ரோல் வங்கியிற்குச் சென்றேன். ரூ.500 கொடுத்தேன். 3L பெட்ரோல் ரூ.220 90mL என்ஜின் எண்ணை ரூ.20 என்று ரூ.240 ஆயிற்று. பெட்ரோல் நிரப்புபவர் மீதி சில்லரை என்று கொடுத்தார். வாங்கிக்கொண்டு சற்று நகர்ந்தேன். என் முன்பு இடதுப் பக்கத்தில் வண்டி டயருக்கு காற்று நிரப்ப நான்குப் பேர் வரிசையில் இருந்தனர். நானும் காற்று நிரப்பி பல வாரங்கள் ஆகிவிட்டது என்று நின்றேன். நான்கு பேருக்கு காத்திருக்க சற்று பொறுமையும் இல்லை எனக்கு. இருப்பினும் மனதை சற்று கட்டுப்படுத்தி வண்டிக்கு அடிச்சி பல ஆச்சு, இதுல ஒரு அதிகபட்சம் அஞ்சு நிமிடம் தான் ஆகும். பரவாயில்லை. நம்ம ஒன்னும் வெட்டி முறிக்க போகவில்லை என்று காத்து இருந்தேன். ஒரு இரண்டு நிமிடம் பிறகு என்னிடம் ஒரு பெட்ரோல் பங்கு ஊழியர் (வேறு ஒருவர்) வந்து பேசினார். நீங்க எவ்ளோ காசு கொடுத்தீங்க ? ரூ.500 என்றேன். எனக்கு உடனே பளார் என்று மூஞ்சில் அடித்ததுப் போல் ஒரு எண்ணம். ஆமாம். நான் ரூ.260 வாங்க வேண்டிய இடத்தில் ரூ.60 வாங்கி விட்டு வந்து இருக்கிறேன். அவர் எனக்கு ரூ.200 தந்துவிட்டு சென்றார். அங்கேயே தலையில் கை வைத்து சிந்தித்தேன்.

இதில் இரண்டு அம்சங்களை நோக்க வேண்டும்
1) இன்றும் அறம் சார்ந்து நிறுவனங்கள் இயங்குகின்றன. என் நேரம் நான் அஞ்சு நிமிடன் நின்றதனால் எனக்கு ரூ.200 கிடைத்தது என்பதை காட்டிலும், அவர் வந்து எனக்கு ரூ.200 தனைத் தேடி வந்துக் கொடுத்த அறவுணர்ச்சியைப் பாராட்டாமலும், நெகிழாமலும், கற்காமாலும் இருக்க இயலாது. இதைப் போன்ற தருணங்கள் தான் வாழ்வில் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்ற வேரிற்கு நீரூற்றிக்கொண்டே இருக்கின்றது. அறம் வாழ்க! 

2) நான் எவ்வளவு அலட்சியமாய் இருந்து உள்ளேன் என்பதை நான் திரும்பிப்பார்க்காமல் இருக்க முடியாது. இதற்கு என்ன காரணம் ? பர்சில் காசு இருக்கா? மறதியா ? கவனகுறைவா ? வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற அவசரமா ? இவையெல்லாம் சேர்ந்த ஒரு அமைதியின்மையா ? என்னை நானே கேட்டுகொள்கிறேன்.  எல்லாமே தான் என்று தோன்றுகிறது. (பின்பு. அம்மாவிடம் சொன்னேன். அம்மா சொன்னார்கள், பெட்ரோல் வங்கியில் பெட்ரோல் போட்டு விட்டு தான் காசு கொடுக்க வேண்டும். இது பெட்ரோல் வங்கியிற்கு மட்டும் அல்ல)

ஒவ்வொரு ரூபாயும் இந்த தருணத்தில், அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வு எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அடுத்த மூன்று மாதங்களும், அதன் பின்பும் வாழ்க்கையில் நாம் எவ்வளவு சிக்கனமாகவும், கவனமாகவும், பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது உறுதிப்பட தெரிகிறது. 

February 28, 2014

மீன் குழம்பு [குடைநிழல் - தெளிவத்தை ஜோசப்]

மகள் எப்போதுமே என் கட்சிதான். எப்போதும் எதற்கும் அப்பா வேண்டும் அவளுக்கு. அம்மாவுடனான, அண்ணாவுடனான சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அவளுக்கு அப்பா வர வேண்டும்.

நேற்று பகல் சாப்பாட்டின் போதுகூட அம்மாவுடன் ஒரு றகளை.

நேற்று பகல் எங்கள் வீட்டில் மீன் குழம்பு.

மகள் மீன் சாப்பிடுவதில்லை! அவளது மறுப்பின் நியாயம் கருதி நானும் வற்புறுத்தவில்லை.

முன்பெல்லாம் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவாள். சின்ன மீன் என்றால் மாத்திரம் சற்றே சங்கடப்படுவாள். துண்டு மீன் என்றால் முள் பிரச்சினை கிடையாது. மிகவும் விரும்புவாள். அம்மாவின் மீன் குழம்பு வைப்பே ஒரு தனித்துவமானது. தனிச்சுவையானது. கிராமப் புற சிங்களப் பெண்கள் பலாக்காய்கறி சமைப்பதுபோல, ஒரு அருமையான கைப்பக்குவம் அது!

வெறும் குழம்பை வெறும் தட்டில் விட்டு வழித்து வழித்துச் சுவைப்போம். நானும் மகளும். அப்படி இருந்தும் இப்போது மீன் குழம்பு சாப்பிட மறுக்கின்றாள் என்றாள் அதற்கான் வலுவான காரணங்கள் உண்டு.

கொஞ்ச காலத்துக்கு முன் எதுவிதமான் கேள்வி கேட்பாடுகளுமின்றி இளைஞர் யுவதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். டயர் போட்டு எரிக்கப்பட்டனர்.

காலெரிந்த, அரையெரிந்த பிணங்கள் காடு மேடென்று கிடந்தன. கூடுதலானவை ஆறுகளில் எறியப்பட்டன.

வாயுப்பி வயிறுப்பிக் கரையொதுங்கி மனிதர்களை பயமுறுத்தியவை ஒன்றிரண்டு! மீதியெல்லாம் ஆற்றிலோடி கடலுக்குள் சங்கமித்து மீன்களுக்கு உணவாகின.

மனிதர்கள் மட்டுமா மீன் தின்னலாம்! மீன்களும் மனிதர்களைத் தின்ன வேண்டாமா! ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் ஏறும் வரலாறுகள் தான்.

அரச இயந்திரத்தை செயலிழக்கச் செய்யும் உறுதியுடன் மேற்கிளம்பிய தென்னிலங்கைச் கிளர்ச்சிக்காரர்களை அரசு அடக்கி காட்டியவிதம் இது.

ஒருநாள் மனைவி சமையலுக்காக மீன் அரிந்து கொண்டிருந்தாள். வழக்கம்போல் மகளும் உடனமர்ந்து ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள். அரிந்த மீனின் அடிவயிற்றை நசுக்கிக் குடல் எடுக்கும்போது பிதுக்கிய வேகத்தில் விரல்களுக்கூடாக நழுவி ஒடித் தனியாக தரையில் விழுகிறது ஒரு விரல் துண்டு. மனித விரல்! வர்ணம் பூசிய நகத்துடனான ஒரு சுண்டு விரல் துண்டு.

மகள் பயப்படக்கூடும் என்பதால் தாய் லாவகமாக மறைக்க முயன்றிருக்கின்றாள். சின்னஞ்சிறிசுகள் ஆர்வம் மிக்கவர்களாயிற்றே.

‘அது என்னம்மா’ என்றவள் தெறித்தோடி விழுந்த விரல்துண்டைக் கண்டுவிட்டதும் ‘சீக்கே’ என்றப்படி எழுந்தோடிவிட்டள். அந்த சம்பவத்துக்குப் பிறகு மீன் என்றாலே அவளுக்கு ஒரு அறுவறுப்பு சாப்பிட மறுப்பாள். சாப்பிட மாட்டாள். நானும் வற்புறுத்துவதில்லை.

வீட்டில் மீன் குழம்பு என்றால் ஏதாவது மகளுக்கு தனியாக இருக்கும். நேற்றும் மீன் தான். தனியாகச் சமைத்திருக்கும் குழம்பை எடுத்துக் கொடுக்காமல் தாய் மீன் குழம்பை மகளிடம் தள்ள ‘பாருங்கப்பா’ என்று மகள் சிணுங்க. நான் எழுந்துபோய் மற்ற குழம்பை எடுத்து வந்து மகளுக்கு ஊட்டினேன். 

‘நீங்கள்தான் அவளை கெடுக்கிறது’ என்று பொய்யாகச் கோபித்துக்கொண்டாள் மனைவி. மகள் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தாயைச் கேலி செய்தபடி ஓரக்கண்ணால் என்னை நோக்கி கண் சிமிட்டுவாள்.

HE IS MY EVERTHING
HE IS MY ALL - HE IS MY EVERYTHING
FOR GREAT THINGS AND SMALL
HE GAVE HIS LIFE FOR ME.

என்று ஏசுவின் நவநாள் பிரார்த்தனையின் போது படிக்கப்படும் பாடலை உயர்ந்த குரலில் பாடினாள். அம்மாவை உசுப்பிவிட.

(இலங்கை மலையக பகுதி எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடைநிழல் [2010] குறுநாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி அல்லது சிறுகதை என்றும் சொல்லலாம்)

மலையக பகுதி - யாழ்ப்பாணம் அல்ல. இந்தியாவில் இருந்து தேயிலை தோட்டதிற்கு அடிமைகளாக சென்றவர்கள்.

January 17, 2014

குல்லா

நான் ஜூன் 1984 பிறந்த குழந்தை. செப்டெம்பர் 1984 இல் (மாத கடைசியாக இருக்கலாம்) சற்று குளிராக இருந்ததாம். நான் எனது பாட்டியை அரவனைத்துக் கொண்டேனாம். இதைப் பார்த்த எனது பட்டு என்னை அப்படியே விட்டுவிட்டு தாத்தாவிடம் கடைக்குச் செல்கிறேன் என்று சொல்லி உடனடியாக கிளம்பிவிட்டார்கள். பாண்டிக்குச் சென்று (டவுனுக்கு சென்று) ஷப்னமில் எனக்கு ஒரு ஸ்வெட்டர், குல்லா, கை கால்களுக்கு சாக்ஸ் வாங்கி வந்தார்கள். அதை முதல் வேலையாக எனக்கு போட்டுவிட்டு பார்த்தார்களாம். தாத்தாவும் எதற்கு இப்படி அவசர அவசரமாக சென்று வந்தாய், ஏன் இதனை அவசர அவசரமாக வாங்கினாய் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையாம். இந்த குல்லாவை போட்டுப் பார்த்தப்பிறகு தான் பட்டுவுக்கு திருப்தியாக இருந்ததாம். மற்றும் அந்த பழுப்பு (மேரூன்) நிறக் குல்லாவில் நான் சூப்பராக இருந்ததாக பட்டு குறிப்பிடார்கள் இன்று சற்றுமுன் பேசிக் கொண்டிருக்கையில். அவ்வன்பின் கதகதப்பில் நான் இன்றும் குளிர்காய்ந்துக் கொண்டு இருக்கிறேன். அந்த குல்லா இன்னும் வீட்டில் எங்கேயோ இருக்கிறதாம். இருப்பின் அதை பாதுகாக்க வேண்டும்.

December 27, 2013

மீன்கள் - தெளிவத்தை ஜோசப் - சிறுகதை தொகுப்பு

சென்ற வாரம் விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க செல்லும் முன் இவ்வாண்டின் விழா நாயகர் எழுத்தாளர் திரு.தெளிவத்தை ஜோசப் (இலங்கை மலையக பகுதி எழுத்தாளர். பூர்வீகம் - தமிழ்நாடு) அவர்களின் மீன்கள் சிறுகதையை மட்டும் படித்தேன். வலையங்களின் இன்னும் சில சிறுகதைகள் இருந்தன ஆனால் பின்புப் புத்தக வடிவில் வாங்கி படிக்கலாம் என்று எண்ணிப் படிக்கவில்லை. இன்று படித்தேன். 

நான் நிரம்ப சிறுகதைகள் முன்பின் படிக்காவிட்டாலும், எனது பாட்டியும் படித்து கருத்துக் கூறியதால், நானும் சற்று ஆழ்ந்து படித்தமையால் என்னால் ஒன்று சொல்ல முடியும் - மீன்கள் சிறுகதை தொகுப்பு (நற்றிணை பதிப்பகம்) படிக்க வேண்டிய ஒரு மிகசிறந்த தொகுப்பு. 

நான் சிறிது அறிந்துக்கொண்டவற்றில் சில 

(சிறுகதையின் வலையத்தல சுட்டி உள்ளது. தட்டவும்)

ஒரு மிக சிறிய வீட்டில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளுடன் ஒரு கணவன் மனைவி வாழ்கின்றனர். கதையின் துவக்கமே ஒரு பெரிய திகைப்போடு (கதையின் முடிவுடன்) துவங்குகிறது. இப்படி பட்ட சிறிய வீட்டில் இவர்களுக்கு அந்தரங்கமே கிடையாது. அந்தரங்கம் இல்லாத் வாழ்வு ஒர் வாழ்வா ? இவர்கள் ஒரு குடிசையைக் கூட மற்றவர் அனுமதி இன்றி கட்டிகொள்ள முடியாது. இவர்களுக்கு இன்னொரு வீடு கேட்க கங்கானியை காண செல்கிறான். அங்கு என்ன நடப்பது என்பது தான் கதை. 

கதையில் வரும் வரி - "எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!" என்பதே கதையின் சாரம்சம்.

ஒரு கல்யாணம் ஆன தமிழன் தன்னுடன் வேலை புரியும் சிங்கள பெண்ணுடன் நாளடைவில் பழகி உறவு கொள்கிறான். இதனை அவனின் மனைவி மூலம் அறியும் அவனது நண்பர் ஆச்சர்யப்படுகிறார். இந்த விவகாரம் துவங்கும் முன் கேள்விப் பட்ட போது நம்பவில்லை ஏனென்றால் அலுவகத்தில் கிசுகிசுக்கள் சகஜம்.  அவன் நினைப்பது இது தான் "பிலாக்காய் என்றால் பிளந்து பார்த்துவிடலாம். மனிதனை எப்படிப் பார்ப்பது என்று". 

மனைவியை (அவள் சொந்த ஊரிக்கு அனுப்பி) ஒதுக்கி வைத்து அந்த சிங்கள பெண்னை கல்யாணம் செய்து கொள்கிறான். பெண் குழந்தை. காலம் செல்கிறது. புதிய பெண்டாடி இத்தனை ஆண்டுகளுக்குள் வியூகம் அமைக்கிறாள். மொழி, மதம், இனம், சுற்றம், சூழல் சமூகம், எனப் பல படிகள் கொண்ட வியூகம் அது. வெளித்தோற்றம் காட்டாத உள் மன விலங்குகள்.

இப்போது முதல் மனைவியின் குடும்பம் எப்படி இருக்கும் என்று எண்ணுகிறான் நண்பன். காலம் எப்படி எல்லாம் மனித மனங்களின் காயங்களை குணப்படுத்திவிடுகிறது. குணப்படுத்தி விடுகிறதா அல்லது மறைத்து வைத்துக் கொண்டு மறக்கடித்து விடுகிறதா…! அந்த பெண் குழந்தைக்கு கல்யாணம் ஆகும் நேரம் ஒரு சிக்கல். இவன் கிறுஸ்துவனாக மாறவேண்டும். இவன் எதிர்கிறான். ஆனால் அவர் சூழ்நிலைகளின் கைதியாக வெகு காலமாகிவிட்டது.

இந்த கதை திபாவளி நாளை மத்தியமாக கொண்டு மூன்று நாட்களில் நகர்கிறது. 

பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. - என்று துவங்குகிறது கதை.

பஸ்ஸில் ஒரு பிச்சைகாரனுக்கு காசுப் போடும் மக்களின் மனநிலையை படம் பிடித்து காண்பிக்கிறது இக்கதை. 

ஒரு பேருந்தில் நடக்கும் பயணமே கதை. இதில் சிங்களவர்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் பேருந்தில் நடக்கும் பாரபட்சமே கதை. 

இது ஒரு சின்னப் பயணம். பத்துமைல் தூரம் ஓடும் பஸ் பயணம். இதே இந்த மக்களுக்கு இத்தனை சிரமமானதும், சிக்கலானதுமாக இருக்கிறதென்றால் வாழ்க்கை எனும் பெரும்பயணம்…..?

ஒரு சிங்கள டாக்டர் ஒரு தமிழரின் வீட்டில் காந்தி, நேரு, போஸ் படங்களை பார்த்து, நீங்கள் எங்கள் நாட்டு தலைவர்களின் போட்டோகளை வைக்காமல் உங்கள் பூர்விக நாட்டு தலைவர்கள் போட்டோவை வைத்து உள்ளீர். ஆனால் இங்கு குடியுரிமை கேட்கின்றீர். கடைசி தமிழன் வரை அனுப்ப வேண்டும் என்கிறார். படத்தில் உள்ளவர் யார் என்று சிங்கள டாக்டர் கேட்கிறார். தமிழனின் பதில் : 

காந்தியின் படத்தைப் பார்த்து இது யாருடைய படம் என்று கேட்பதன் மூலம் தனக்கும் எனது தலைவர்களுக்கும் பெருமைத் தேடிக் கொள்வதாக எண்ணிக்கொள்ளும் அய்யாவின் அறியாமை அவனுக்கு சிரிப்பூட்டியது.

“இது யாருன்னு அய்யாவுக்குத் தெரியலையா… அடப்பாவமே! ‘மனிதர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதால் மற்ற நாட்டை வெறுக்கிறார்கள் என்பதல்ல பொருள்’ என்று கூறிய மகாத்மா இவர்தான்.

மற்றவர்களுடைய தலைவர்களை, மற்ற நாட்டவர்களை வெறுப்பதன் மூலம் மட்டுமே உங்கள் நாட்டை, உங்கள் தலைவர்களை, உங்கள் நாட்டவர்களை நேசிப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளும் உங்கள் போன்றவர்களுக்கு உலகத்துக்கே ஒப்பற்றவரான ஒரு மனிதரைத் தெரிய முடியாதுதான்….”

ஒரு இரண்டு வயது குழந்தை குளியல் அரையில் தாழ்ப்போட்டுக்கொண்டு மாட்டிக் கொள்கிறாள். இருட்டில் அவள் உற்சாகம் இன்றி இருக்கிறாள். வீட்டில் உள்ள உறவினர்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி இந்த நேரத்தில் குழந்தையுடன் பேசவேண்டும் என்று தெரியவில்லை. 

தாத்தா குழந்தையிடம் நான் உங்களிடம் வருகிறேன் என்று பேசியப் பின் குழந்தை மனதில் ஒரு உற்சாகம். பின்பு குழந்தையிடம் லாவகமாக பேசி குழந்தை வைத்தே கதவை திறக்கிறார் தாத்தா. 

குழந்தை வந்தவுடன் இனிமேல் குழந்தை பிரச்சனையில் மாட்டிகொள்ளாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்கள். ஆனால் ஒரு சிக்கலில் (இருக்கும் குழந்தை) எப்படி செயல் படவேண்டும் என்ற பாடத்தை அங்கு யாரும் கற்கவில்லை.

ஒருவன் கொழும்புவில் இருந்து தன் உடம்பு சரியில்லாத (சாக கிடக்கும்) அம்மாவை காண தனியாக அவன் சொந்த ஊர்க்கு செல்கிறான். அவன் குடும்பம் வரவில்லை. 

முன்பு அவன் வந்தால் "அந்த வயதிலும் அந்தக் குளிரிலும் அம்மா சிட்டைப்போல் பறப்பதாகத் தெரியும் அவனுக்கு. உழைத்து உரமேறிய உடல் சீக்கிற்கோ தளர்வுக்கோ அது இடமளிக்காது. அவனுடைய வருகையும் அவளுக்கு ஒரு புதுத் தென்பைக் கொடுக்கிறது. உடலிலே ஒரு இளமை@ நடையிலே ஒரு துள்ளல்!"

தங்களைச் சுற்றி சுற்றியே வலம் வரும் அம்மாவின் அன்புப் பார்வை அவனைத் தடுமாறச் செய்கிறது.

அம்மாவுக்கென்று அவன் என்ன செய்திருக்கின்றான்? படித்து பாஸாகி உத்தியோகம் தேடி காதலித்துக் கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்று …..

என் மகன் இப்படி இப்படி இருக்கிறான் என்று கூறிக் கூறிப் பெருமை படும் நெஞ்சம் அது!

மருமகளிடம் அம்மா மூச்சு விடமாட்டார்கள். ‘ வாம்மா, இரும்மா’ என்றுகூடச் சொல்லமாட்டார்கள்: ‘வாங்க, இருங்க’ தான். மருமகள் அம்மாவுக்கு ஒரு மகாராணி மாதிரி! என் மகளை நம்பி வந்தவளாயிற்றே என்னும் நினைவு.


எனக்கு என்ன செய்தாய் என்று எதிர்ப்பார்க்கும் நெஞ்சமல்ல… இப்படி ஒருநாள் வருவதுவும் “இனி எப்பப்பா?…..” என்னும் கேள்வியுடன் விடை பெறுவதுவும்தான்; அவன் செய்வது!

என்று அம்மாவின் பாசத்தை உணர்த்துகிறார். 

ஆனால் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று ஏற்கனவே மூன்று முறை குடும்பத்துடன் வந்து பார்கிறான். சிறிய இடமென்பதால் ஒரே நாளில் ஊருக்கு திரும்பிச் செல்கிறான் ஒவ்வொரு தடவையும். இந்த தடவை தனியாக வருகிறான். இந்த நிலையில் அவர்களின் மனதை காண்பிக்கிறார். இங்கு வந்து செல்வது ஒரு நடுத்தர வர்கனான அவனுக்கு எவ்வளவு நிதி சுமையாக இருக்கிறது என்று காண்பிக்கிறார். 

திடீரென்று குஷி வந்து விட்டால் இருநூறு ரூபாய்க்கு ஐஸ்கிரிம் வாங்கி தின்பார்கள். நூறு ரூபாய்க்குக் குடைவாங்க சங்கடப்பட்டுக்கொண்டு கழுத்தில் டையுடன் மழைக்கு கையை தலையில் வைத்துக் கொண்டு றோட்டில் ஓடுவார்கள்.. அந்த வர்க்கத்தின் அச்சொட்டான பிரதிநிதிதான் இவனும்… இல்லாவிட்டால் ழும்பது ரூபாயில் பஸ்ஸில் செல்வதை விடுத்து ஐநூறு ரூபாய் செலவு செய்து காரில் போவானா?

இந்த தடவை அவனிடம் காசு அவ்வளவு இல்லை. வட்டிக்கு வாங்குவது அதிகம். அலுவகத்தில் Death Fund Scheme இல் போலிசி எடுக்க விண்ணப்பிகிறான். அவர்கள் மூன்று மாத சம்பளம் கொடுப்பார்கள் ஆனால் அம்மா இறந்தால் தான்.  அவன் என்னுகிறான் இந்த தடவை அம்மா ஏமாற்ற மாட்டார்கள்.

பாவ சங்கீர்த்தனம் (மின் அணு பதிப்பு (சுட்டி) இல்லை)
ஒரு வயதில் பெரியவர் ஒரு பெண்னை பார்த்து மனதில் எப்படி பட்ட எண்ணங்களை கொள்கிறார் என்று கதை சொல்கிறது. அந்த பெரியவரின் கடவுள் வழிபாடுகளை கூறுகிறார்.

மந்திரங்களை கீழ்வகுப்புப் பிள்ளைகள் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிப்பதுபோல

உலகத்தின் அசுர வேகத்துடன் இணைந்தோட இறை வணக்கத்திலும் ஒரு வேகம். வெறும் உதட்டாட்டம். ஜபத்தின் கருத்து மனத்தைத் தீண்டமுடியாத ஒரு வேகம்.

எண்ணிப் பாத்தால் என்ன சுவாமி இருக்கிறது இவ்வுலக வாழ்வில் - ஒன்றுமே இல்லை.

இவர் உத்தியோகத்தில் மட்டுந்தான் பெரியவர்.

கோவிலில் மண்டியிட்டுக் கூறமட்டும்தான் ஜபம் என்றால் அந்த ஜபத்தை படிக்க வேண்டிய அவசியம் ... ?

பெண்ணின் கண்ணீருக்குச் சக்தி. கண்ணீரைவிட அந்தக் கண்களுக்கே சக்தி அதிகம்.

ஒருவாரம் செய்த பாவங்களைச் சுவாமியார் ஒருவரிடம் சொல்லிவிட வேண்டியது. அடுத்த வாரத்துக்கான பாவங்கள் அடுத்த வாரத்தில் ஒரு நாள்.

குப்பைத் தொட்டி நிறைவதும் காலிபண்ணுவதும் பிறகு நிறைவதும்போல. அதுவா பாவ சங்கீர்த்தனம் ? அவருக்குமா பாவ மன்னிப்பு கேட்கிறது ?

December 25, 2013

தியானமும் - ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்

சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையத்தில் ‘ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்’ என்ற ஒரு கட்டுரையை படித்தேன். அதில் ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணத்தில் உள்ள தியானம் சம்மந்தமான ஒர் ஆழமான தத்துவ குறியிடு உள்ளதை அவர் சுட்டிக்காட்டியதை படித்தேன். அதனை நகலெடுத்து இங்கு எழுதுகிறேன். 


ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்
அந்த அசுரனின் ஒவ்வொரு துளி குருதியும் ஒரு தனி ரத்த பீஜாசுரனாக முளைக்கும். அவனிடம் அம்பிகை போர்புரிய புகுந்தபோது அவள் ஆயுதத்தால் அவன் தாக்கப்பட்டபோதெல்லாம் பலவாக வளர்ந்தான். ஆகவே அம்பிகை இரண்டாக பிரிந்தாள். ஒரு அம்பிகை ரத்த தாகம் மிக்க ஒரு பூதமாக ஆனாள். அவள் இன்னொரு தெய்வீக அம்பிகை விட்ட அம்புகளால் ரத்த பீஜாசுரன் கொட்டிய குருதியை தன்  நாவால் நக்கிக் குடித்தாள். அசுரன் அழிந்தான்.

நம் தாய்தெய்வ உருவகத்தில் இருந்து அம்பிகை என்ற பெருந்தெய்வம் உருவாகி வந்தது அதன் வரலாற்றுப்பின்னணி. ஆனால் இக்கதை ஆழமான ஒரு தத்துவக் குறியீடு. தியான மரபில் மிக முக்கியமானது. அடிப்படை இச்சைகளுடன் நேருக்குநேராக நின்று போர் புரிய முடியாது என்று சொல்கிறது இது. போர்புரியும்தோறும் அது பெருகும். ஆகவே நம் போதமே இரண்டாக பிரியவேண்டியிருக்கிறது, அம்பிகையாகவும் பூதமாகவும். தியானம் பழகியவார்களுக்கு மேலும் புரியும்.

இப்படித்தான் நாம் புராணங்களைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் புராணங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நமக்கு பௌராணிக மரபு அழிந்தது. புராணத்தை தத்துவத்துடன் இணைத்து எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் பெரும் புராணிக சொற்பொழிவாளர்கள் இல்லாமல் ஆனார்கள்.

விளைவாக புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது. இன்று எந்தக்கோயிலில் சென்றாலும் அங்குள்ள அர்ச்சகர் அவருக்கு தோன்றிய ஓர் அற்புதக் கதையை சொல்வார். பல கதைகள் மக்குத்தனமாகவே இருக்கும்.

மூலம் : http://www.jeyamohan.in/?p=3720  [சுட்டியை தட்டுக]

December 13, 2013

Daily Project திருக்குறள் (Thirukkural)

On 11-December-2013 Wednesday, I and my friend /ex-colleague Nagamani have collaborated to work on a daily project called Daily Project திருக்குறள் (Thirukkural). Thirukkural is one the most important works in Tamil Literature. It is believed to be written around 2nd century BC and 5th century BC. More information available in Wikipedia.

There are numerous websites, blogs, tweeples available for Thirukkural. Most of them have ripped, though giving due credits to authors, from popular explanatory books such as the ones authored by Mu.Varadharajan, Solomn Paappaiyaa, Parimelazhagar etc. 

Objective
1) Learn and absorb Thirukkural on a daily basis
2) Byheart the Kural
- Not to come up with a new / detailed explanation as there are numerous books already.

Target Dates
1) Soft Target - 31st August 2017 (considering it takes 3 years and 235 days)
2) Hard Target - 30th November 2014 (Considering 30 days per year for festivals, sickness, exigencies)

Rules
1) Only One Kural (குறள்) per day

2) All three sections - Righteousness, Wealth, Love (பால் - 1.அறம், 2.பொருள், 3.காமம்) in a cyclic order. But not necessarily in same order 1-2-3. It can be permutations such as 1-2-3, 3-2-1, 2-3-1 etc)

3) No author should shy from one particular aforementioned Section or stick to one particular section

4) All Chapters (அதிகாரம்) will be covered in 10 cycles. I.e In one cycle, the chapter will not be repeated. 

5) There will not be any repeat in the Kural. If willing to any additional explanation, then re-edit it and save it to latest date. However, this will not be considered as the Kural of that day.

6) In future, no more than a total of 5 authors will be allowed.

7) Kurals in Chapters can be picked in random. Chapters can be picked in random. But aforementioned rules 2,3,4,5 will apply.
[Updated: Chapters has to be in order and Kurals also need to be in order. This will save time in making decisions and also avoid repetitions]

8) Authors will follow a cyclic fashion

9) Co-author can take up the role of the author of the day ONLY when they come to know about sickness or any exigency. 

December 06, 2013

பாவேந்தர் பாரதிதாசன் - நான் ரசித்த சில பாடல்கள்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களில் நான் ரசித்த சில பாடல்கள்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !

November 10, 2013

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பற்றிய எனது கருத்தை சொல்லப்போனால் எனது ஆதங்கத்தினால் முதல் முறையாக எதிர்வினையை எழுதுகிறேன். 


ஸ்டார் விஜய் தொலைக்காட்சிகளிலேயே நான் மதித்து விரும்பி முக்கியமாக நடுவர்கள் நடுநிலையானவர்கள் என்ற முழுநம்பிக்கையுடன் பார்த்த ஒரு நிகழ்ச்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு. இந்த நிகழ்ச்சி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.  அப்போது நான் தில்லியில் இருந்தேன். காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும். எனக்கு வயலின் வகுப்பு 10 மணிக்கு இருக்கும். ஆதலால் 9:50 வரை பார்ப்பேன். என்னை மிகவும் கட்டிப்போட்டு வைத்தது. நான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அப்போது தொடங்க ஒரு உந்துதலாக இந்நிகழ்ச்சி . அன்று முதல் திரு. நெல்லை கண்ணன் ஐயா மீது மிகந்த மதிப்பு இருந்து வருகிறது.  முதல் தொகுப்பில் விஜயன் எல்லோரையும் மிரட்டினார். அவரது கருத்துக்கள் மிக சுயமாக ஆழ்ந்த அவதானிப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. பல நேரங்களில் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கண்கலங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல நல்ல பேச்சாளர்கள் எழுத்தாளர்களை கண்டுகொண்டேன். இந்த ஆண்டு நிகழ்ச்சியை கண்டபின் திரு நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் பேச்சுக்கள் பலவற்றை யூட்யூபில் பார்த்தேன். 2009 பிறகே இவரது பேச்சுக்களின் ஒளிப்பதிவுகள் யூட்யூபில் ஏற்றம் அதிகம் பெற்றன என்றென்பது குறிப்பிடதக்கது. 

முதல் தொகுப்பை தொடர்ந்து தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் வந்தது. அலுவுலக பணி இட மாற்றம் மற்றும் படிப்பு காரணமாக அதை நான் முழுவதுமாக காணவில்லை. பார்த்த சில நாட்களில் குழந்தைகள் நன்றாய் பேசுவது மகிழ்ச்சியளித்தது. 

இந்த ஆண்டு 2013இல் ஜூலை மாதம் முதல் மறுபடியும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் இரண்டாம் தொகுப்பு ஒளிப்பரப்பானது. துவக்கம் முதலே இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார்ப்போல் பல நல்ல பேச்சாளர்கள் உரையாற்றினார்கள். திரு நெல்லை கண்ணன் அவர்கள் தலைமை நடுவராக இவர்களை நல்பாதையில் வழிநடத்தி  சென்றார். நிகழ்ச்சியின் துவக்க காலம் நல்துவக்கமாக அமைந்தது. இராமநாதன், கல்யாணசுந்தரம், ராஜ் மோகன், சரவண சித்தார்த், ஷண்முக சுந்தரம், மஞ்சரி, பௌசியா பானு, முனீஸ்  பவித்ரா, இளமுருகன், காசிநாதன்  ஆகியோர் நல்ல ஒரு தொகுப்பிற்கு நம்பிக்கையை விதைத்தார்கள். முதல் மூன்று சுற்றுக்கள் சில போதிய பயிற்சி அல்லாதவர்களை களைவதாக அமைந்தது.  இதில் ஒரு உறுத்தலான ஒன்று கண்ணுக்கு தெரியாமல் பின்புலத்தில் நடந்தது. அகிலா போன்ற நல்ல பேச்சாளரும் ராம் கபிலாவும் மற்றும் சிலரும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தாங்கலாக வரவில்லை என்று சொல்லப்பட்டது. தாங்களாகவே திடீரென்று விலகினார்கள். ஒரு வேளை அவர்கள் உச்சரிப்பு அவ்வளவு சரியில்லை இல்லை தாங்கள் இன்னும் சிறுமிகளே என்று வரவில்லையோ தெரியவில்லை.

என்னை பொறத்தவரை நிகழ்ச்சி கலைகட்டியது நான்காவது சுற்றில் திருக்குறளை பற்றி அனைவரும் ஒவ்வொரு  அதிகாரத்தில் பேசியது  தான். அதுவும் மஞ்சரியின் ஒழுக்கமுடைமை, இளமுருகனின் உழவு, ஷண்முகசுந்தரரின் புணர்ச்சிவிதும்பல், முனீஸ் பவித்ராவின் நெஞ்சொடுகிளத்தல் பேச்சுக்கள் அபாரம் அபாரம். அதுவும் காமத்துப்பாலில் உள்ள உளவியல் ரீதியான செய்திகளை அன்று தான் முதல் முதலில் உணர்ந்தேன் என்று சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். எனது எதிர்ப்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. வரும் வாரங்களில் சங்க இலக்கியம், கவியரங்கம், இசையரங்கம் போன்றவற்றில் திளைப்பேன் என்று நினைத்தேன்.

ஐந்தாவது சுற்று. இங்கு தான் பயணம் திசை மாறியது.  நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் நடுவர் இருக்கையில் இல்லை. எங்கள் மனதில் சந்தேகம் வர காரணம் அவர் மிக நேர்மையானவர். இந்த நிகழ்ச்சி தமிழுக்கு செய்யக்கூடிய ஒரு தேவையான தொண்டு என்று உணர்ந்தவர். அவருக்கு இதை தவிர்க்கும் அளவிற்கு வேறு வேலை வைத்து இருப்பாரா என்றால் ? இருக்கும். ஆனால் அவர் இதன் வீச்சை அறிவார். ஆதலால் ஒரு காலமும் அவர் வராமல் இருக்க வேறு காரணம் இருக்காது என்று எண்ணுகிறேன். வந்த இரு நடுவர்களும் அருண்மொழி அவர்களும் தமிழச்சி தங்கபாண்டியனும் பேச்சாளர்களை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கினார்கள். பேச்சாளர்களை மெருகேற்றவே எதிர்வினைகள். ஆனால் தமிழச்சி தங்கபாண்டியன் தன் திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளையே முன்னிறுத்தி கொண்டு இருந்தார். அவரை ஒரு படித்த பண்பட்ட உலக அறிவு கொண்ட ஒரு பகுத்தறிவு  பீரங்கியாக தன்னை ப்ரபலபடுத்திகொள்ளவே ஈடுபட்டார் என்பது பார்க்கும் யாருக்கும் விளங்கும். எதற்கு தமிழச்சியை அமர்த்தினார்களோ ? ஸ்டார் விஜய் தொலைகாட்சிக்குதான் வெளிச்சம். நிகழ்ச்சியின் முடிவில் சுமார் 6 பேரு நீக்க  பட்டனர். பேர்  அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சி குட்டிச்செவுரு என்று வருத்ததுடன் கொந்தளிப்புடன் எனக்கு  உறுதியானது. திறமையான மஞ்சரி, முனீஸ் பவித்ரா, போசிய பானு நீக்கப்பட்டனர். நான்காம் பத்தியில் கடைசியில் சொன்னது எனக்கு இப்போது ஐயமாக தோன்றுகிறது. ஒரு வேளை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியே அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாதோ ? 

ஆறாம் வாரம் திரு நெல்லை கண்ணன் ஐயாவை மறுபடியும் கண்டதில் ஒரு நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் தமிழச்சியின் பங்கேற்பு கசப்பாகவே என் மனதை உறுத்தியது. ஆனால் ஆறாவது சுற்றே அரையிறுதிச்சுற்று என்று எண்ணுகையில் ஈடுபாடு அவ்வளவுவாக இல்லை. திரு நெல்லை கண்ணன் ஐயா பேருக்கு தான் உட்கார்ந்து இருந்தார் என்று தோன்றிற்று. இந்த சுற்றில் எட்டில் நான்கு பேர் விலக்கம். அதுவும் முதலில் பேசிய நான்கு பேர். 

இந்த வாரம் இறுதிச்சுற்று. ஒரு நடுவர் அருண்மொழி அவர்கள் நேரம் குறைவாக கொடுக்கப்  பட்டதனால் நீங்கள் குறைவாக செய்திகள் சேகரித்து உள்ளீர்கள் என்று  கூறினார். இதில் இருந்து எனக்கு மிக தெளிவாக தெரிந்தது அரையிறுதிச்சுற்றும் இறுதிச்சுற்றும்  ஒரிரு நாள் இடைவேளியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று.  அதுவும் முதலில் பேசிய இருவரும் மிகுந்த குறைந்த நேரமே பேசினார்கள். 'வியப்பில்லாமல்' அவர்கள் இருவரும் கடைசிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கபடவில்லை. கடைசியாக ராஜ்மோகன் வெற்றிப்பெற்றார். அவர் நல்ல பேச்சாளர். ஆனால் முதல் பரிசு வாங்கும் அளவிற்கு அவரது உரை ஒன்று கூட இருந்தது  இல்லை. ஷண்முக சுந்தரம், ராமநாதன், மஞ்சரி, முனிஸ் பவித்ரா, கல்யாண சுந்தரம், இளமுருகன் ஆகியோர் இவரை விட முன்பு பல நல்ல ஆழமான பேச்சாற்றியுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் (திருக்குறள் வாரத்திற்கு பிறகு) வெளியேற்றபட்ட யாவர் முகங்களிலும் ஒரு வருத்தமோ ஏமாற்றமோ இல்லை. வருத்தபட ஒன்றும் இல்லை - நிகழ்ச்சி சீர்கெட்டுவிட்டது என்று அறிவார் அவர்.

ஆக இந்த நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. அதுவும் ஏழே சுற்றுகளில். இதில் ஒரு கவியரங்கம், விவாதம், பட்டி மன்றம் போன்ற சுற்றுக்கள் இல்லை. இங்கு தான் நான் இவ்வளவு நேரம் தொலைக்காட்சி மேல் சந்தேக பட்ட நான் சற்று ஒரு படி உள்ளே சென்று அவதானிக்க விரும்புகிறேன். 2009 ஒன்பது போல் 9 மணிக்கு அல்லாமல் 10 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது ஒரு ஆரோக்கியமான ஒன்று. 10 மணி என்பது சற்று அதிக டி-ஆர்-பி கொண்ட நிகழ்ச்சிகளுக்கு கொடுப்பார்கள் என்று எண்ணுகிறேன். அப்படியென்றால் மக்களின் மீது  நம்பிக்கை வைத்தே  இரண்டாம் தொகுப்பை நடத்தி உள்ளனர். ஆனால் அவசர அவசரமாக ஏழே சுற்றுகளில் முடிக்க பெரும் காரணமாக நான் மக்களையே பார்க்கிறேன். கண்டிப்பாய் டி-ஆர்-பி குறைவாக இருந்து இருக்கும். இது தொலைகாட்சியின் குற்றமா ? இல்லை. மக்களின் குற்றம். இங்கே மற்ற நிகழ்ச்சிகள் போல் அழுகைகளும் ஆராவரங்களும் போலி நாடங்களும் இல்லை. திறமையும் நேர்மையும் கைகோர்க்கும் இடமாகவே இருந்தது. ஆனால் மக்களுக்கு நல்ல அறிவுள்ள பேச்சுகளை கேட்க ஆயுத்தமாக இல்லை.  அவர்களுக்கு மலிவான சராசரியான பொழுதுபோக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே தேவை என்ற அவல நிலை உள்ளது. அவர்கள் மொழி,  வாசிப்பு தன்மை, இலக்கியம், சொற்பொழிவு,  கலாசாரம், விவாதங்கள் போன்றவற்றில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார்கள். வேதனை அள்ளிக்க கூடிய ஒன்று. பாரதி சொன்ன "தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதர்கள்" உள்ளவரை இது போன்ற நிகழ்ச்சிகள் பெருவாரியான வெற்றிப்பெறாது. 

தமிழ் மக்களை காப்பாற்றுக! தமிழை காப்பாற்றுக!

November 07, 2013

Palani - Darasuram Trip

I planned to make a pilgrimage trip with my family to Palani Hills on this Diwali. Gladly, my Guruswamy family (my Guru in my Sabarimala Trip for last 18 years) and my friend Gokul Nambiar family also joined us for this trip. The plan started off with a 4 seater Tata Indica, then 6 seater Toyota Innova and finally 12 seater Force Traveller. I am glad that such a trip happened for me. My plan was to visit Palani Hills and Darasuram in a single day. But, since more number of people joined, we decided to extend the plan by half day. 

Day 1
On Saturday 2-Nov afternoon at 2:30pm, we headed to Srirangam. However, my guru suggested a temple in Thiruppattur (5km from Siruganur on the NH). At Thiruppattur, we first worshiped Lord Brahmapureeshwara (there is a separate shrine for Lord Brahma). Then Sri Devi Bhoodhevi Varadharaja Perumal Temple. After a tea, we headed to Sri-Rangam Temple . After long wait in spite of lined up in paid queue, we had a very good darshan of Lord Ranganadhaswamy. We had prasadam's from the stall as well as did our dinner at the temple itself under the Annadhana scheme. After dinner we headed to Palani Hills. 

Day 2
On Sunday 3-Nov Morning, we trekked 25 minutes to reach the Lord Dhandayudapany Shrine. My mother had made arrangements to do abhishekha for the Lord Murugan deity in the morning around 8:45a.m. Around 11am we headed to Darasuram from Palani. 

After our lunch at Trichy, we travelled via the Great Anicut Dam (Kallanai)m built by the Chola King Karikala Chola around 2nd Century AD). I must say that it was excellent part of travel. On my left, it was full of farm lands ranging from banana plantation to paddy fields while on my right it was the mighty Cauvery River. It was unfolding endlessly. Those two hours was a great watch for me.

We reached Darasuram at 5 p.m and visited the Airavatheeswara Temple.  This temple was built by Rajaraja Chola II in the 12th century CE is a UNESCO World Heritage Site and one of the Great Living Cholas Temples. It had excellent, intricate sculptures. One testimony for the excellent scriptures is the fused common face for a cow and a elephant. After spending one hour at the temple, we left to Swamimalai Murugan Temple. Later we headed to Vaitheeswaran Temple. Finally, our memorable satisfactory trip came to an end.

Places Covered
Thirupattur

Sri Brahmapureeswarae Temple,
Sri Sridevi Bhoodevi Varadharaja Perumal Temple
SrirangamSri Aranganatha Swamy Temple
PalaniSri Dhanayudhapany Swamy Temple
DarasuramSri Airavatheeswarar Temple
Swami MalaiSri Skanda Murugan Temple
Vaitheeswaran KoilSri Vaitheeswaran, Sri Thaiyal Naayagi, Sri Muthukumara Swamy

Here are few pictures.


Thiruppattur - Brahmapureeswara Temple

Palani Temple - A pilgrim carrying Milk-Abishekha Tank

Trichy to Darasuram - via Great Anicut Dam (Kallanai) - 
On my left - Banana Plantation and Paddy fields


 Trichy to Darasuram - via Great Anicut Dam (Kallanai) - 
On my right- Cauvery River



Airavatheeswara Temple 


Arthanareeswarar

Gokul Nambiar's Father at Horse Rath

A group pic but my guruswamy missing






My Guruswamy family




Main Gopura of Airavatheeswara Temple



Sri Durga

Mom and Grand Mom


Elephant and Cow with a common fused face

Elephant and Cow with a common fused face